மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேசத்தில் கடந்த இரு வார காலமாக மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் மர்மமான முறையில் இப்பிரதேச கடலில் இரு படகுகள் வந்ததை தொடர்ந்தே மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தடை விதிப்பினால் இப்பிரதேசத்தில் மீனுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் காயான்கேணி, வாகரை, பால்சேனை, கதிரவெளி, மாங்கேணி, வட்டவான், பனிச்சங்கேணி போன்ற கரையோர கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் ஏழை மீனவ குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிப்புற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, முன்னர் வழங்கப்பட்டிருந்த சாதாரண பாஸ் நடைமுறை மூலம் மீன்பிடித்தலும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Thursday, 17 July 2008
வாகரைப் பிரதேசத்தில் மீன்பிடிக்கத் தடை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment