ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக பதவியை இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச, சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சட்டத்தரணி கொமின் தயாசிறி ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சு ஆகிய பொறுப்புக்கள் கோதபாயவிற்கு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தம் மிக முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளதனால் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் இன்றியமையாததென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும், வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு ஜே.வி.பி.யின் சார்பில் வசந்த குருவிட்ட நியமிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு ஏற்கனவே தீர்மானித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment