சார்க் வலய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு, பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயன்படுத்தப்படும் யூரோ நாணயத்தை போலவே பொதுவான நாணயம் சார்க் நாடுகளுக்கும் பொதுவான நாணயத்தை உருவாக்குவது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்பாட்டின் போது பிராந்திய வல்லரசான இந்தியாவின் ரூபா நாணய பொறுமதிக்கேற்ப நாணயம் ஒன்றை வெளியிடும் இணக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த சார்க் மாநாட்டின் போது, பிராந்திய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்த யோசனையை முனவைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment