Wednesday, 9 July 2008

பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது- சர்வதேச நாணய நிதியத் தலைவர்

சில வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றிருப்பதாகவும், விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு உயர்ந்த வட்டி வீதத்தை கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ரஸ் கான் தெரிவித்துள்ளார்.

பணவீக்கமானது உலகப் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றிலும், குறைந்த வருமானமிக்க நாடுகளிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாகவும், இந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கை மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்த நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிடாவிட்டாலும், லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.

No comments: