Saturday, 12 July 2008

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார் வைகோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

சிகாகோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமாவை வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமா குறித்து தான் எழுதிவரும் புத்தகம் பற்றி அவருடன் விவாதித்தார்.

'உங்களது திறமையும் தலைமைப்பண்பும் கண்டங்களைத் தாண்டி, உலகின் பலமுனைகளில் வாழும் மக்களை ஈர்த்துள்ளது' என்று ஒபாமாவிடம் வைகோ குறிப்பிட்டார்.

''எஸ், வீ கேன்'' என்னும் தலைப்பில் வைகோ எழுதும் அந்த புத்தகத்தின் வரைவு நகலில் ஒபாமா தனது கையொப்பத்தை இட்டுள்ளார். அதில், ''வைகோ, எஸ், வீ கேன்'' என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மாணவராக, சமூகத் தலைவராக, செனட்டராக ஒபாமா சந்தித்த போராட்டங்கள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மதிமுக இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: