Friday, 25 July 2008

இராணுவ உயர் அதிகாரி திருட்டுச் சம்பவத்தில் கைது

இராணுவப் படையில் ஆட்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்த வந்த அதிகாரியொருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரி முகமாலையிலிருந்து பொல்கஸ்ஓவிட்டவிற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் செல்ல முற்பட்ட போது பொதுமக்கள் குறித்த அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் தற்போது பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க நகையை பறித்துச செல்ல முற்பட்ட போதே குறித்த இராணுவ உயர் அதிகாரி மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

No comments: