ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.
எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார். இதனால் நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது
, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நன்றி:BBC
Tuesday, 1 July 2008
ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல் நாளை போக்குவரத்து ரத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment