Tuesday, 15 July 2008

இலங்கையின் பாதுகாப்பில் - றோ உள்நுழைவு

சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ள மூன்று தலைவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தெரிவித்து,

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போர்வையில் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் றோ உளவுப்பிரிவை ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக லங்கா ருத் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த பாரிய திட்டத்தின் கீழ் தொலைபேசி வலையமைப்பை கண்காணித்தல், அதிசக்தி வாய்ந்த ஜேமர் இயந்திரம், நடமாடும் ஜேமர் இயந்தரம் போன்ற முக்கிய புலனாய்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்புகள் ரோ உளவுப்பிரிவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

இதனைதவிர இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்கான இந்திய கறுப்பு பூனைப்படையினர் இலங்கையில் பிரவேசிக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அதி தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய உலங்குவானூர்திகள் சில இலங்கை வான்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்

என்றுமில்லாதவாறு இந்தியாவின் இத்தகைய தலையீடுகள் காரணமாக பாகிஸ்தான் ஜனாதிபதி சார்க் மாநாட்டிற்கான வருகையை ரத்துச் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தக் கு;றச்சாட்டு குறித்து இந்திய தரப்பிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments: