மட்டக்களப்பு காரைதீவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுந்தரம் கதிரேசன் என்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.
சம்மாந்துறைப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து கல்முனை மாவட்டப் பதில் நீதிபதி ஏ.எம். பதுறுதீன் சகிதம் விசாரணையை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்டத் தமிழ் பிரதேசங்களில் அண்மைக்காலமாக அடிக்கடி சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று காரைதீவு காலை 7 மணியளவில் சுற்றிவளைப்புக் குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sunday, 20 July 2008
மட்டக்களப்பு காரைதீவில் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment