Sunday, 6 July 2008

கிழக்கில் மீண்டும் புலிகள் உயிர்ப்பு; நசுக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வு! மின்னேரியா பாதுகாப்பு தலைமையகத்தில் கோத்தபாய மற்றும் தளபதிகள் மாநாடு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்ப்புப் பெறுகின்றனர். அதனை நசுக்குவதற்கு தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டத்தில் அவசர அவசரமாக ஆராயப் பட்டுள்ளது.

மின்னேரியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை இந்த உயர்மட்ட மாநாடு நடைபெற்றது. விடுலைப் புலிகளை கிழக்கில் மீண் டும் தலையெடுக்க விடாமல் தடுப்பதற் கான சகல நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்வதென மாநாட்டில் முடிவுசெய் யப்பட்டது.

புலிகளின் எந்த வன்செயல்களுக்கும் வன்செயல் அச்சுறுத்தல்களுக்கும் இடங் கொடக்காத விதத்தில் தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் முடிவாகியது என்று,மாநாடு முடிவடைந்த பின்னர் பாது காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூ ரில் ரயில் சேவைக்கு பாதுகாப்பு வழங்கு வதற்காக ரோந்தில் சென்ற பொலிசாரை இலக்குவைத்து சைககிளில் பொருத்தப் பட்டு கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட் டது. இச்சம்பவத்தில் மூன்று பொலிஸா ரும் பொதுமகன் ஒருவரும் காயமுற்றது தெரிந்ததே.

14 வருடங்களுக்குப் பின்னர் பெரும் யுத்தம் ஒன்றை நடத்தி அரசாங்கம் விடு தலைப்புலிகளை கிழக்கில் இருந்து விரட்டியது . அதன் பின்னர் மஹிந்த அரசு அங்கு அண்மையில் மாகாணசபைத் தேர் தலையும் நடத்தியது

கிழக்ககை அபிவிருத்திக்கும் புனர் வாழ்வுக்குமான ஒரு மாதிரிப் பிரதேசமாக மாற்றப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக அடிக்கடி கூறி வந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் தமது கைவரிசையை காட்டியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே புதிய பாதுகாப்புத் திட்டம் குறித்து அரச தரப்பில் அவசரமாக ஆராயப்பட்டதாக "புளூம்பேர்க்' செய்தியகத்தின் செய்தியா ளர் மைக்கேல் ஹீத் தெரிவித்திருக்கின் றார்.

No comments: