Friday, 4 July 2008

மீள்க்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மீள்க்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக புத்தளம் வண்ணாத்திவில்லு, எருக்கலம்பிட்டியில் நேற்று (யூலை04) ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அமைச்சரினால் எருக்கலம்பிட்டி முஸ்லீம் பாடசாலைக்கு வழங்கிய 40 லட்சம் ரூபாவும் கட்டிடப் பொருட்களுக்கும் தமக்கு தேவையில்லையில்லை

என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். டயர்களை எரியூட்டி, விளக்குமாறு என்பவற்றை ஏந்தியும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் ரிசாத் பதியூதீன் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதனை அறிந்தே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் பணம் தேவையில்லை எனில் அதனை வேறுபாடசாலைக்கு வழங்க முடியும் எனவும் பெற்றோர் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் அவர்களின் பிள்ளைகளுக்கு செய்யும் அநீதி எனவும் அமைச்சர் பதியூதீன் கூறியுள்ளார்.

இந்த முரண்பாட்டுக்கு அரசியல் பேதமே காரணம் என நடுநிலையில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எருக்கலம்பிட்டி முஸ்லீம் பாடசாலையில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: