Friday, 4 July 2008

கருணாவின் மீழ் பிரவேசத்தால் புலிகள் குழம்பிப் போயுள்ளனராம் - திவயின


கருணா அம்மானின் மீழ் பிரவேசத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் குழம்பிப் போயுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இராசையா இளந்திரையன் மிகவும் பதற்றமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையானோ அல்லது கருணாவோ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டும் வரும் விடுதலைப் புலிகள் உண்மையிலேயே மிகவும் அச்சத்துடன் காணப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களில் ஓர் வெற்றி வீரனான வர்ணிக்கப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உண்மையான முகத்திரையை முதன் முதலில் கருணா அம்மானே கிழித்தெறிந்தார் என ரிவயின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கருணா நாடு திரும்பியுள்ள நிலையில் புலிகளுக்கு ஆதரவான பல இணையதளங்கள் கருணாவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

(திவயின இலங்கையில் இருந்து வெளிவரும் கடும்போக்கு சிங்கள தேசசியவாதப் பத்திரிகை)

No comments: