பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையிலான காவல் துறை அதிகாரிகள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தராதரம் பார்க்காது பாரபட்சமற்ற ரீதியில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சேவையாற்றுவதனை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், காவல்துறையில் 34 வருடம் சேவையாற்றியுள்ள புதிய காவற்துறை மா அதிபர் வெள்ளை வான் கும்பல் பற்றி தமக்கு எதுவம் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளமை வேதனைக்குரிய வியடம் என பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் பதவிகளில் கடமையாற்றுவோர் தூதுவராலய அல்லது ஆளுனர் பதவிகளை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு சார்பாக நடந்து கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment