பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு சாக்லெட் தயாரிப்பு நிறுவனம், விண்வெளிக்கு செல்வதற்கு ஒரு போட்டி அறிவித்தது. பரிசுக்குரிய எண் இடம்பெற்றுள்ள தனது கம்பெனியின் சாக்லெட்டை வாங்குபவர், இந்த வாய்ப்பை பெறலாம் என்று அறிவித்தது.
பிரான்சு நாட்டைச் சேர்ந்த மதில்டே எப்ரான் என்ற 32 வயதான விமான பணிப்பெண், அந்நிறுவனத்தின் சாக்லெட்டை வாங்கினார். சாக்லெட்டை சாப்பிட்டு விட்டு, அந்த உறையை குப்பையில் போட்டு விட்டார்.
நமக்கு எங்கே பரிசு கிடைக்க போகிறது? என்பதே அவரது எண்ணம். 2 மணி நேரத்துக்கு பிறகு, அவருக்கு தனது அதிர்ஷ்டத்தை பரிசோதித்து பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
எனவே, குப்பையை கிளறி ஒருவழியாக சாக்லெட் உறையை கண்டுபிடித்தார். அதில் இருந்த எண்தான், பரிசுக்குரிய எண் என்று தெரிய வந்தது. இதனால் விண்வெளிக்கு பயணிக்கும் அதிர்ஷ்டத்தை அவர் பெற்றுள்ளார்.
அதற்கு முன்பாக, விண்வெளியில் பறப்பதற்கான பயிற்சி, அமெரிக்காவில் அவருக்கு 4 நாட்கள் அளிக்கப்படுகிறது.
Tuesday, 22 July 2008
குப்பையில் வீசிய சாக்லெட் உறையால் விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment