இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டை கண்காணிப்பதற்காக ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோவே மொடொகி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நட்புறவு வலுப் பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளில் ஒன்றான அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரையாண்டு காலப்பகுதியில் ஈரான் பாரியளவில் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 15 ஆவது சார்க் மாநாட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மசகி கொய்முராவும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thursday, 24 July 2008
சார்க் மாநாடு கண்காணிப்பாளர் வரிசையில் - ஈரான்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment