Tuesday, 15 July 2008

மட்டக்களப்பில் எலிக் காய்ச்சல்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்த சகல செயற்றிட்டங்களும் முன்வைக்கபட்டுள்ளதாகவும் மாவட்ட தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.தட்ணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இக் காய்ச்சலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள பிரதேச மக்கள் தொழில் நிமித்தம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற இடத்திலேயே அவர்களுக்கு இந் நோய் தொற்றியுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: