அரசாங்கம் தனது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்த முயற்சிப்பதாக ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டராநாயக்க மாநாட்டு மண்படபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பிக்கு முன்னணியின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தேசப்பற்றுள்ள அரசியல் அமைப்பு என்ற வகையில் வடக்கு கிழக்கை இரண்டாக அரசியல் வெற்றி ஒன்றை பெற்றோம்.
எனினும் அரசாங்கம் கிழக்கில் மேற்கொண்ட தவறான அரசியல் கொள்கையினால்,கிழக்கில் ஜனநாயகத்திற்கு பதிலாக இனவாத அரசியலை முன்னெடுத்து ஜனநாயகத்தை இல்லாது செய்தது.
இராணுவத்திற்கு மன தைரியத்தை கொடுத்து,மக்கள் மத்;தியில் கருத்தொன்றை ஏற்படுத்தி பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பின்னனியை ஜே.வீ.பீ உருவாக்கிக் கொடுத்தது. எனினும் அரசாங்கம் இந்த யுத்தத்தை உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.
5 ஆயிரம் ஊதிய அதிகரிப்பு கோரிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என கூறிய அரசாங்கம், புதிய அமைச்சர் ஒருவரை நியமித்து,வெட்கமற்ற அரசாங்கமாக மாறியுள்ளது.
உழைக்கும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனில் அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கும் உரிமை என்ன எனவும் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பினார்.வரலாற்றில் முழுவதுமாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்த கட்சி ஜே.வீ.பீயே, நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிக்கா, ஹக்கீம், தொண்டமான் ஆகிய அனைவரும் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளனர்.
எனினும் ஜே.வீ.பீ விடுதலைப்புலிகளையும் அதற்கு உதவி செய்தவர்களையும் தோற்கடித்து, புலிகளை தோற்கடிக்கும் புறச்சூழலை ஏற்படுத்தி கொடுத்துடன் சுனாமி நிவாரண சபையை தோற்கடித்தது. சுனாமி நிவாரண சபைக்கு உதவியவர்களும் அதற்காக செயற்பட்டவர்களும் தற்போது,ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரையை குத்துக்கின்றனர் எனவும் ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment