Thursday, 24 July 2008

ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து மூன்றாவது தமிழரும் ராஜினாமா? - ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளி நாடொன்றில் அரசியல் தஞ்சம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து விலகிக் கொள்வதற்கு தனது இராஜிநாமாக் கடிதத்தை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஆணையாளர்களில் ஒருவரான அஹமட் யாவிட் யூசுப் தெரிவித்துள்ளார்.


அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு நீதிபதி நிசங்க உடலாகமவைத் தலைவராகக் கொண்டு எட்டுப் பேர் அடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் படுகொலை , மூதூர் அக்ஷன் பாம் ஊழியர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஆணைக்குழுவில் அங்கத்தவரான கலாநிதி தேவநேசன் நேசையா ஆணைக்குழுவிலிருந்து விலகியிருந்தார்.

இதேவேளை இன்னொரு தமிழர் ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளி நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது.

No comments: