Tuesday, 22 July 2008

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் இருவரும் வர்த்தகர்களாவர்.

உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த 22 வயதான ராசுக்குட்டி சந்திரமோகன் என்பவர், தமது வீடியோ தலத்தில் வைத்து உந்துருளியில் வந்தோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதேவேளை வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் 34 வயதுடைய பார்த்தீபன் என்ற வர்த்தகரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரவெட்டி கொடிகாமம் வீதியில் உள்ள இவரின் வியாபாரத் தலத்திற்கு வந்தவர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இவர்களின் சடலங்கள் முறையே யாழ்ப்பாண வைத்தியசாலையிலும், மந்திகை வைத்தியசாலையிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments: