இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை ஒன்று விரைவில் கைசாத்தாகும் சாத்தியங்கள் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படல் போன்ற சம்பவங்கள் தற்போது இரண்டு தரப்பினராலும் எடுக்கப்பட்டுவருவதால் இந்த கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை முக்கியமான ஒன்றாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொழம்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் எம்.வி.நம்பூரிதி இது குறித்துகருத்து தெரிவிக்கையில், தமது குழுவினர் நீர்கொழும்பு மற்றும் வெலிக்கட சிறைச்சாலைகளுக்கு சென்று இந்தியக் கைதிகளை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் சார்க் மாநாட்டிற்காக இந்தியத்தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தக்கைதிப் பரிமாற்று உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளதாக முடிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:
so,india is going to exchange prisoners like mahindha?
Post a Comment