எட்டியாந்தோட்டை கித்துல்கல, புளத்கொவ்பிட்டிய, அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு பறந்த மர்ம விமானம் குறித்து முக்கிய நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக கேகாலை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வில்பர்ட் மஹாநாம தெரிவித்துள்ளார்.
களணி கங்கையில் இறக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விமானம் வெளிச்சமற்ற இரவு வேளைகளிலும் கொழும்பின் எந்த இடத்திற்கும் ரகசியமான முறையில் பறந்து செல்ல கூடியது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை தாம் கடந்த ஒருவருடமாக கேட்டுள்ளதாகவும் காவற்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment