தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள யுத்த நிறுத்தம் தொடர்பாக கவனம் செலுத்த போதிய கால அவகாசம் தேவை என அரசாங்க சமாதான செயலகம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்தம் தொடர்பாக மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத் தலைவர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஆங்கில நாளேடொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது ராஜீவ விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment