Friday, 18 July 2008

போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏ.பி.சி.யின் தெற்காசிய நிருபர் சிங்கப்பூரில் கைது

* குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை, 15 பிரம்படி

சிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.

41 வயதுடைய லொய்ட் கடந்த புதன்கிழமை கைதானார். போதைப்பொருள் தொடர்பான அவர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்படும்.

சிறியளவிலான மெதம்பெற்றமைன், புகைபிடிக்கும் சுங்கான், 6 ஊசி மருந்தேற்றும் சிறிஞ்சுகள் ஆகியவற்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

31 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதானதையடுத்தே லொய்ட்டை கைது செய்ததாக சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்பு தேசிய பிரிவு அறிக்கை விடுத்திருப்பதாக ஏ.பி.சி. தெரிவித்தது.

No comments: