Saturday, 5 July 2008

இலண்டன் விருந்தாளி கருணா மீண்டும் கொழும்பு விஜயம்!--அந்தரங்கங்கள் சில அம்பலமாயுள்ளன


ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார்.

தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்.

லண்டன் அதிகாரிகள் இவருக்கு தெளிவாக விளங்கப்படுத்தினர், இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த நாடுகளின் பாஸ்போர்ட் தங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் நாடுகளுக்கு நாமாக பாஸ்போர்ட் எடுத்து அனுப்ப முடியாது.

இலங்கையில் என்றால் அவர்கள் ராஜதந்திரிக்கான பாஸ்போர்ட்டை உமக்குத் தருவார்கள். ஏனைய நாடுகள் இந்தமாதிரி போஜரி வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். எனவே நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் இலங்கைதான்.

வேறு நாடுகளுக்குச் சென்றால் உங்களைப் பிடித்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் ஆயுள்தண்டனை வழங்கி விடுவார்கள். லண்டன் சட்டம் உங்களுக்குத் தண்டனை தர இடமளிக்காததால் நீங்கள் தப்பித்துள்ளீர்கள் என்று விளங்கப்படுத்த அம்மான் ஆடிப்போய்விட்டார்.

பிள்ளையான் முதலமைச்சர், நான் பி.ஏ. ஆகவென்றாலும் இருக்கிறேன் என்னை கொழும்புக்கு அனுப்புங்கோ என்று கூறி இறுதியில் மீண்டும் கொழும்புக்கு வந்திறங்கிவிட்டார் கருணா.

வந்து இறங்கியவர் சும்மா வாயைவைத்துக்கொண்டு இருக்காமல், தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டுதான் நாடு திரும்பியதாக பி.பி.சி. தமிழோசைக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

அப்படியென்றால், தாங்கள் லண்டனுக்கு சுற்றுலாவகத்தான் சென்றீர்களா? என்ற கேள்வியை தமிழோசை கேட்டிருக்க வேண்டும்.

லண்டனுக்கு சுற்றுலாவாகச் சென்றால் அவர் தனது சொந்த கடவுச் சீட்டில் அல்லவா பயணித்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.

லண்டனில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதும் கருணா தனக்கு தஞ்சம் (அகதி அந்தஸ்து) வேண்டும் என்றுதான் கோரியிருந்தார். கொழும்புக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று கோரவில்லை.

லண்டனில் தஞ்சம் கோரிய கருணாவுக்கு, பிரித்தானிய அரசாங்கம் லண்டனில் தங்குவதற்கு அனுமதி கொடுக்காமல் மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

திரும்பி வந்த கருணா கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையென்று நினைத்து, லண்டனில் தஞ்சம் கோரி தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தச் சென்ற கருணா, தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டுதான் நாடு திரும்பியதாக புருடாவிட்டுள்ளார். தமிழ் மக்கள் அவரின் பொய்முகத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இதற்கிடையில், கருணா தனது பழைய சகாக்களிடம், சீ! இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் நான் லண்டன் போயிருக்க மாட்டன். இவன் கிருஸ்ணபிள்ளையின்ட கதையைக் கேட்டுத்தான் நான் இப்படி அவமானப்பட்டது.

உலகத்தில் இருக்கிற இயக்களிட தலைநகரமே லண்டன்தான் என்று சொன்னான் கிருஸ்ணன். ஆனா என்னை மட்டும் வெள்ளக்காரனட்ட மாட்டிவிட்டுட்டான். அதற்கிடையில் பிள்ளையான் நாய் எல்லோரையும் ஏமாற்றி முதலமைச்சர் பதவியையும் கைப்பற்றிவிட்டான்.

தலைவர் கருணா வந்தவுடன் முதலமைச்சர் பதவியை அவரிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, அவனிடம் போனில் கதைத்தால், வேலைப்பளு அதிகமாக இருக்கிறது பிறகு பேசுகிறேன் என்று என்னிடமே சொல்கிறான்.

நான்தான் அவசரப்பட்டுவிட்டேன்! நான் மட்டும் லண்டன் போகாமல் விட்டிருந்தால் முதலமைச்சர் பதவி எனக்குத்தான் கிடைத்திருக்கும் ஓரளவு மரியாதையும் இருந்திருக்கும் எல்லாத்தையும் இந்த கிருஸ்ணன் கெடுத்துவிட்டான் என்று தனது சகாக்களிடம் புலம்பியதாக நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ! கருணா அம்மான் வந்துவிட்டார். இனி வரும் நாட்களில் சுவையான தகவல்களைக் காணலாம்.

3 comments:

ஆட்காட்டி said...

அப்ப அவர் தான் மட்டக்களபை முன்னேற்றப் போறேரோ?

ஆட்காட்டி said...

அப்ப அவர் தான் மட்டக்களபை முன்னேற்றப் போறேரோ?

Anonymous said...

RESUME - KARUNA

OBJECTIVE: CHIEF MINISTER - EASTERN PROVINCE

FLED TO UK WITH A FALSE PASSPORT ISSUED BY THE SRI LANKAN GOVT. IN THE NAME OF KOKILA GUNAWARDENE - SLFP ORGANISER MIRIGAMA TO AVOID INTERNATIONAL ACCUSATIONS TO THE SRI LANKAN GOVT.

DEPORTED TO SRI LANKA BY THE UK GOVT. AFTER 7 MONTHS OF JAIL TERM FOR USING A FALSE DOCUMENT.

PRESENTLY RESIDING AT THE HILTON HOTEL (5 STAR) COLOMBO WITH MAXIMUM GOVT. SECURITY.

EXPERIENCES:
KILLED OVER 600 SRI LANKAN POLICEMEN IN THE EAST.

ACCUSED BY THE UN HUMAN RIGHTS FOR ABDUCTING AND KILLING TAMIL CIVILIANS.

UN ACCUSED KARUNA FOR CHILD RECRUITMENT.

KILLED HIS OWN VEHICLE DRIVER BY FORCING HIM TO DRINK POISON

OVER 118 MUSLIM WORSHIPPERS BEEN KILLED AT KATTANKUDDY JUMMA MOSQUE.

BETRAYED HIS OWN ARMED GROUP FOR 30SIVER COINS.