கல்வித்துறையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாக, பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று இலண்டன் பொங்குதமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று
உரையாற்றிய, ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சியோபெய்ன் மக்டொனாஹ் (Siobhain McDonagh), பிரித்தானியாவின் வளர்ச்சிக்காக புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஆற்றி வரும் பங்களிப்பிற்கு, தனது நன்றியை உரித்தாக்கியுள்ளார்.
அத்துடன், பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும்
தமிழ் மாணவர்கள், கல்வித்துறையில் ஏனைய மாணவர்களுக்கு
முன்னுதாரணமாக திகழ்வதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்
சியோபெய்ன் மக்டொனாஹ் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments:
Post a Comment