Friday, 25 July 2008

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பின் கறுப்பு ஜூலை இரத்ததான நிகழ்வுகள்

2008 ஆடி மாதம் 24ம் திகதியன்று கனேடிய தமிழ் இளையோர் அமைப்பு இரத்ததானம் நிகழ்வு ஒன்றை நடாத்தியது. இந்த நிகழ்வானது 83ஆம் ஆண்டு ஆடிப் படுகொலைகளின் ஞாபகார்த்தமாக கனேடிய தமிழ் காங்கிரஸ் உடன் இணைந்து நடாத்தப்பட்டது.

1983ம் ஆண்டு இலங்கையென்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாக்காளர் அட்டைமூலம் இனங்கானப்பட்டு சிங்கள அரசாங்கத்தின் முழு அனுசரணையுடனும் கொன்றொழிக்கப்பட்டது உலகறிந்த விடயமே.

அத்தருணத்திலிருந்து இன்றுவரை இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் தமிழ்ர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் நாடுகளில் கனடா முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் கனேடியர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாயும், 25 ஆண்டுகள் கடந்தும் தமிழர் மீதான இனப்படுகொலைகளை அச்சமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கை அரசின் குரூர முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் முகமாயும் கனேடியத் தமிழர்கள் ஒன்றிணைந்து இரத்ததானம் செய்து வருகின்றார்கள்.

இந்தவகையில் தமிழ் இளையோர் அமைப்பினது இரத்த தான நிகழ்வுகளிலும் இழைஞர்களும், யுவதிகளும் பேரரெழுச்சியுடன் கலந்து கொண்டு, கனேடிய இரத்த தான அமைப்பின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.


No comments: