அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி மகா சங்கத்தில் இருபத்திரண்டு இலட்சத்து அறுபத்தையாயிரத்து தொலாயிரம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சமுர்த்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு பணிப்பாளர் எம்.நடேசராசா தெரிவித்துள்ளார்.
இம்மகா சங்கத்தின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரே இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த உத்தியோகத்தர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இவ்வருடம் இம்மாதம் வரை இம்மோசடியில் ஈழுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இம்மகா சங்கத்தின் நிதிய முதலீட்டுப் பணம் கல்முனை ஊவா அபிவிருத்தி வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்தது.
குறித்த உத்தியோகத்தர் இவ் ஊவா அபிவிருத்தி வங்கியில் இருந்த இம்மகா சங்கத்தின் நிதிய முதலீட்டுப் பணத்தை வங்கியின் நிலையான வைப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து இப்பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.
வங்கியின் போலி சான்றிதழை மகா சங்கத்தில் சமர்ப்பித்து மகாசங்கத்தின் முகாமைத்தவப் பணிப்பாளர் மற்றும், உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இம்மோசடியில் ஈடுபட்ட உத்தியோகத்தர் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் இவரை பொலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்மோசடி நடவடிக்கை தொடர்பாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வாளர்களும் சமுர்த்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு பணிப்பாளருமான எம்.நடேசராசா செவ்வாய்க்கிழமையன்று குறித்த மகா சங்கத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
Friday, 25 July 2008
கல்முனை தமிழப்பிரிவு சமுhத்தி மகாசங்கத்தில் 23லட்சரூபாய் நிதிமோசடி அம்பலம், அதிகாரி தலைமறைவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment