நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான நோர்வேயின் விசேட து}துவர் திரு.ஜொன் ஹன்ஸன் பவர் அவர்களை, அங்கு விஜயம் செய்துள்ள தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதி தலைவர் இரா.துரைரெட்ணமும், (ரெட்ணம் -ஈ.பி.ஆர்.எல்.எவ்.)
அதன் தேசிய அமைப்பாளர் க.சிவநேசனும் (பவன் -புளொட்), புளொட் நோர்வே பொறுப்பாளர் ராஜன், புளொட் நோர்வே பிரதிநிதி பாபுஜி ஆகியோரும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் குறிப்பாக கிழக்கு நிலைமைகள் குறித்தும் சமாதான நடவடிக்கைகளின் முடக்கத்திற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இந்த கலந்துரையாடலின் முடிவில் நோர்வேயின் கடந்தகால சமாதான முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்த த.ஜ.தே.கூட்டணியினர் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் த.ஜ.தே.கூட்டணி முழுஆதரவினை வழங்குமென்றும் தெரிவித்தனர்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோர்வேயின் சோசலிஸ இடது (ளு.ஏ) கட்சியின் முக்கியஸ்தர் திரு. மக்னே அவர்களையும் மேற்படி த.ஜ.தே.கூட்டணி முக்கியஸ்தர்கள் சந்தித்துள்ளனர்.
இலங்கை சமாதான முயற்சிகளில் நோர்வே சார்பில் முக்கிய பங்காற்றும் நோர்வே கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ. எரிக் சோல்ஹெய்ம் அவர்கள் சோசலிஸ இடது கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, 3 July 2008
நோர்வேயின் விசேட சமாதான தூதுவர்- நோர்வேயின் சோசலிஸ இடது (S.V) கட்சியின் முக்கியஸ்தர் ஆகியோருடன் த.ஜ.தே.கூட்டணி முக்கியஸ்தர்கள் சந்திப்பு-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment