உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதன் காரமணமாக ஒரு பில்லியன் ஆசிய மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் ராஜத் நாக் தெரிவித்துள்ளார்.
"இந்த எண்ணிக்கையினுள் தினசரி 1 டொலருடன் வாழ்க்கை நடாத்தும் 600 மில்லியன் மக்கள் அடங்குகின்றனர். ஏனைய 400 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்க்கை நடாத்துகின்றனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துச் செல்லும் உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி ஸ்பெய்னின் தலைநகரில் நடாத்திய 4 நாள் கலந்துரையாடலின் போதே ராஜத் நாக் இதனைத் தெரிவித்துள்ளார்.
"இந்த ஏழை மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் பண உதவிகளை வழங்குவது குறித்தும், இந்த மக்களுக்கு உதவுமாறு அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பது குறித்தும் நாம் பேசியுள்ளோம்" எனவும் நாக் தெரிவித்துள்ளார்.
உலகளவில் உணவு மற்றும் எண்ணெயின் விலைகள் அதிகரித்திருப்பதன் காரணமாக ஆசியாவில் கடந்த 10 வருடங்களில் முன்னெப்போதுமில்லாதவாறு 2008 இல் பணவீக்கம் 5.1 வீதமாக உயரும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
"இது நாம் எதிர்கொண்டிருக்கும் பாரிய கொள்கை ரீதியான சவால்" எனவும் நாக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment