Friday, 2 May 2008

பிரான்சில் நடைபெற்ற மேநாள் பேரணியில் 7000க்கும் மேற்பட்ட தமிழர்கள் எழுச்சிபூர்வமாக பங்கேற்பு!.


பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும் அதிகமான பிரெஞ்சுத் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துகொண்டனர்.

அனைத்துலக தொழிலாளர் நாளான இன்று ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள் அமைப்புக்களுடன் இணைந்து பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி மாலை 2 மணிக்கு பாரிசின் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகியது.
தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் இணிய அணிவகுப்புடன் தேசியத்தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல தேசியத்தலைவரின் நிழற்படம் தமிழீழத் தேசியக்கொடி சிறிலங்கா அரசபயங்கரவாத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் தாங்கியவாறு அனைவரும் பின் சென்றனர்.
சிறிலங்காக அரபடைகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் சித்தரிப்பு ஊர்திகளும் தமிழ் வாத்தியக் கருவிகளை இசைத்தவாறும் காவடி ஆடியவாரும் ஏனையவர்கள் பின் தொடாந்தனர்.

இந்நிகழ்வில் பொருந்திரளான இளையோர் கலந்துகொண்டு தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாத்தன்மையை வெளிப்படும் சுலோகங்களை உரக்கக் கத்தியதுடன் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாடல் அணியினர் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
தமிழரின் பாரம்பரிய கலைவடிவம் ஊடாகவும் போராட்டத்தின் நியாத்தன்மையை எடுத்துச் செல்லாம் என்பதற்கு இணிய அணிவகுப்பு ஓர் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. அக் கலைவடிவத்தால் ஈர்க்கப்பட்ட பிரெஞ்சு மக்கள் தாமாக முன்வந்து தமிழ் மக்களின் இன்னல் நிலையினைக் கேட்டறிந்து கொண்டனர்.

மாலை 6 மணிக்கு போரணி பாரிசின் தேசிய சதுக்கத்துக்க வந்தடைந்தது. அங்கு லாக்குர்நோவ் நகரசபை உறுப்பினர் திரு.அந்தோணி ரூசல் அவர்கள் உரைநிகழ்த்தும் போது எதிர்வரும் ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அப்போது தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாத்தன்மையை ஏற்றுக்கொண்டு பிரான்ஸ் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை விலக்க வேண்டும் என்றும் அதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இணைப்பாளர் திரு.பாலசுந்தரம் லாக்குர்நோவ் நகரசபை உறுப்பினர் திரு.புவனேந்திரன் ஈழநாடு ஆசிரியர் திரு.பாலச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாலை 6.30 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை அனைவரும் பாடி உறுதி எடுத்துக்கொண்டபின்னர் நிகழ்வு நிறைவுற்றது.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களால ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் நாள் பேரணியை குழப்புவதற்கு பல பொய்ப்பிரச்சாரங்களை சிங்கள் பேரினவாத அரசு தமது ஊடகங்கள் மூலம் செய்திருந்தும் இந் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: