Sunday, 25 May 2008

கட்டுநாயக்காவில் தேடுதல் எட்டு பெண்கள் உட்பட14 பேர் கைது

கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 8 பெண்கள் உட்பட 14 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணிமுதல் 8.30 மணிவரையான 4 மணிநேரங்கள் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகரா தெரிவித்தார்.

தேடுதல் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்து கூறியதாவது பொலிஸார் விமானப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஆகியோர் இணைந்து இன்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுநாயக்கா வர்த்தக நிலையத்தில் சேவையாற்றி வருவதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் தமிழர்கள் என்பதோடு அவர்களில் பலர் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணைகளை அடுத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக கட்டுநாயக்கா பொலிஸார் நடவடிக்கை எடத்துள்ளனர்.

No comments: