Sunday, 25 May 2008

வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனையில் இருவர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் உறவினர் முறையீடு

வாழைச்சேனை கல்குடா வீதி பேத்தாளையை பிறப்பிடமாகக் கொண்ட குணசேகரம் சுதர்ஷன் என்ற 29 வயதுடைய தமிழ் இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு அவர் தொழில் புரியும் இடமான கொழும்பு வெள்ளவத்தை 37ஆம் ஒழுங்கையில் வைத்து 57-4263 என்ற இலக்கம் பொருந்திய வெள்ளை வானில் (மஸ்டா) வந்த ஆயுதம் தரித்த நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை மன்னார் பெரியகடையை பிறப்பிடமாகக் கொண்ட காந்தி உஷாந்தன் என்ற 37 வயதுடைய தமிழர் அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு கொழும்பு 13 ஷ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள விடுதியில் வெளிநாடு செல்வதற்காக வந்து தங்கியிருந்தபோது பொலிஸார் என்று கூறி சோதனை செய்வற்காக வந்த 4 பேர் கொண்ட குழுவினர் இவரது அடையாள அட்டையை எடுத்துசெல்ல மற்ற மூவரும் இவரை அழைத்து சென்றுள்ளார்கள்.

இச்சம்பவங்கள் தொடர்பாக சுதர்ஷனின் தந்தையாரும் உஷாந்தன் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரும் இச்சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

அத்துடன், இச்சம்பவங்கள் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments: