சிங்கள மொழியை சரளமாகக் கற்றுக்கொள்வதே தமது அடுத்த பிரதான இலக்கு என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியை சரளமாக பேச முடியாத காரணத்தினால் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாகவும் லக்பிம ஞாயிறு இதழுக்குப் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியை கற்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ளுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதகாவும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment