Sunday, 25 May 2008

ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்,மட்டக்களப்பில் படையினர் குவிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் அணியினர் இந்த இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.


எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையான் தரப்பில் இருந்து உத்தியோக பதில்கள் வெளிவரவில்லை. இதனை அடுத்து அப்பகுதியிலும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்ற சூழ்நிலையினையடுத்தே

இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ், இராணுவம் மற்றும் அதிரடிப்படையினரும் கனரக, ஆயுதங்கள் சகிதம் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி உட்பட இன்னும் பல தமிழ்- முஸ்லிம் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் கனரக வாகனங்களும் இப்பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. காத்தான்குடியில் வியாழக்கிழமை இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட உயிரிழப்புகளையடுத்தே இப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: