Saturday, 24 May 2008

பலியெடுக்கப்பட்ட 16 உடல்களும் உறவுகளின் கதறல்களுடன் ஒரே இடத்தில் அடக்கம்


சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டன.

முன்னதாக கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் இராஜேந்திரம் தலைமையில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. 16 உடல்களும் ஒன்றாக வைக்கப்பட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.

சிங்களத்தால் பலிகொள்ளப்பட்ட 16 உடல்களுக்கு உறவுகள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் வணக்க உரையை நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது.

பின்னர் 16 உடல்களும் பாரதிபுரம் சுடலையில் ஒரே இடத்தில் அருகருகாக அடக்கம் செய்யப்பட்டன.

பெருமளவில் மக்கள் திரண்டு சிங்களப் பயங்கரவாதத்தின கொடுமையில் பலியெடுக்கப்பட்ட அப்பாவிச் சிறார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.


Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

No comments: