* நீர்ப்பாசன அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள போதிலும் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் விசனம் தெரிவித்து ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சேனநாயக்கா சமுத்திர வலது கரை வாய்க்கால், பனங்காடு வாய்க்கால் 14 தொடக்கம் 30 வரையிலான நெடும் தோட்டம், ஆனைப்பாம்வெளி, பாமங்கை, டி.சி.ஒ. கண்டம், கல்லடிவட்டை, புளியம்பத்தை ஆகிய பிரதேசங்களில் 1,700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் இப்பிரதேசத்திற்கான நீர் விநியோகம் தேசநாயக்கா சமுத்திரத்தில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. ஒழுங்குமுறையில் நெற் செய்கைக்கு நீர் பாய்ச்சப்பட்டுவந்த நிலையில் ஒழுங்கு முறை முடிவடைந்து விட்டது என தெரிவித்து வேறு வாய்க்காலுக்கு நீரை திசை திருப்புவதால் நெற் செய்கைக்கு போதிய நீர் இல்லாமல் காணப்படுகிறது. 40 நாட்கள் கடந்தும் நீரின்மையில் நெற்பயிர் கருகி வருகின்றது. நீர்ப்பாசன அதிகாரிகள் உரியவாறு கடமையாற்றுவதில்லை எனவும் இதற்காக திறக்கப்பட்ட கண்ணகிபுர நீர்ப்பாசன அலுவலகம் இயங்காது மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கும் விவசாயிகள், இவை தொடர்பாக நீர்ப்பாசன உயர்அதிகாரிகளான பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மேலதிகாரிகளிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிட்டனர். இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு, ஜனாதிபதி, விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டி தெரிவித்தார்.
Monday, 26 May 2008
அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவைப் பிரிவில் 1,700 ஏக்கர் நெற்செய்கை நீரின்றி பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment