கடந்த வெள்ளிக்கிழமை கச்சதீவு கடற்பரப்பில் கைது செய்ய்பட்ட இவர்கள் மன்னாரில் உள்ள சிறீலங்காப் படையினரின் இரகசிய மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.
சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சிறீலங்காப் படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று மன்னார் நீதிமன்று முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதீயாளர்
ரி.ஜே.பிரபாகரன் சிறீலங்கா காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மாந்தோப்புத்தெருவைச் சேர்ந்தவர்கள் என சிறீலங்கா கடற் படையினர் தெரிவித்தனர். கடற்றொழிலாளர்கள் பயணித்த 4 படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
Thursday, 15 May 2008
சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் கண்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment