இலங்கை மீண்டும் 1970ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்குத் திரும்பியுள்ளதாக பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
"70ஆம் ஆண்டு வாழ்க்கை நிலைக்கு நாம் ஏற்கனவே மீளத்திரும்பி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். நாம் இப்பொழுது அந்த வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என அவர் 'டெய்லி பினான்சியல் டைம்ஸ்' இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.
"உலகளாவிய ரீதியில் டொலரின் வீழ்ச்சியும், எண்ணெய் விலை அதிகரிப்பும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பங்கீடு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கம், அதனை விட்டுவிட்டு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நிலையில் ஒவ்வொரு நாடும் தனது பணவீக்கத்தை 10 வீதத்துக்கும் குறைவாகப் பேணிவருகையில், இலங்கையில் மாத்திரம் பணவீக்கம் 30 வீதத்தை அண்மித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment