Tuesday, 6 May 2008

மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி

மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும்

உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும்.

1 comment:

ttpian said...

Mahindha used to beg from other countries:out of the begging,a begger donates......