1970 களில் உலகின் சில பொருளாதாரப் பலமிக்க நாடுகள் முகங்கொடுத்ததைப் போன்ற பாரிய பணவீக்கத்துக்கு மீண்டும் ஒருமுறை அந்நாடுகள் முகங்கொடுக்க வேண்டிவரும் என 'த எகனொமிஸ்ட்' சஞ்சிகை தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள 10 இல் 5 பொருளாதாரப் பலமிக்க நாடுகளின் பணவீக்கம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் 10 வீதமாகவிருக்கும் என அச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இந்நாடுகளின் உத்தியோகபூர்வ தரவுகள் பணவீக்க அழுத்தத்தைக் குறைத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் த எகனொமிஸ்ட், இந்நாடுகளின் அரசாங்கங்களின் மானியம் மற்றும் விலைக்கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நாடுகளின் இரட்டை இலக்கப் பணவீக்கப் பாய்ச்சலுக்கு உலக சந்தையில் ஏற்பட்டிருக்கும் உணவு மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பே பிரதான காரணம் எனவும், இந்நாடுகள் இறுக்கமான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக தளர்ச்சியான பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடிப்பதாகவும் எகனொமிஸ்ட் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
சில நாடுகளின் மத்திய வங்கிகளால் சுதந்திரமாகச் செயற்படமுடியாதிருப்பதாகவும், அவற்றின் மீது அரசியல் அழுத்தங்கள் நிறைந்து காணப்படுவதாகவும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக, சில நாடுகளில் 1970 களில் காணப்பட்ட 'பாரிய பணவீக்கம்' எனும் நிலைக்கு மீண்டும் முகங்கொடுக்கவேண்டியேற்பட்டுள்ளதாகவும் அச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment