Saturday, 3 May 2008

கஞ்சிகுடிச்சாறில் மிதிவெடியில் சிக்கி 2 இராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு மிதிவெடியில் சிக்கி இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் தங்கள் நிலைகளை நோக்கி இரவு 8 மணியளவில் வந்த படையினரே மிதிவெடியில் சிக்கியதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் இரு படையினர் கொல்லப்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சிகுடிச்சாறு பகுதியில் படையினர் கடும் மோட்டார். தாக்குதலை நடத்தியதாகவும் கஞ்சிகுடிச்சாறு இராணுவ முகாம் பகுதியூடாகச் சென்ற பொதுமக்கள் படையினரின் தாக்குதலுக்கிலக்கானதுடன் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: