காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரிவின் சில இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், மிகுதி பேர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பானவர்கள் எனவும் காலிப் பொலிஸார் தெரிவித்தனர். காலிநகர், ஹினிதும, ஹிக்கடுவ, உடுகம, பத்தேகம ஆகிய பிரதேசங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். இங்குள்ள வீடுகள், கடைகள், வீதிகளில் சென்றோர், வாகனங்கள் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கை தொடர்ந்தும் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Saturday, 3 May 2008
காலியில் சுற்றிவளைப்பு 54 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment