Saturday, 3 May 2008

பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு – காவற்துறை சிப்பாய் கைது:

பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்;தேக நபரான கிளிநொச்சியை சேர்ந்த தேவா என்பவரின் நெருங்கிய உறவினரான கொழும்பு கொள்ளுப்பிட்டி காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருக்கு வீட்டை வாடகைக்கு வழங்கிய பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை பலியந்தலை குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments: