கைதடி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவரது தாயாரும் சகோதரனும் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடமும் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் சாவடியிலும் புகார் செய்துள்ளனர். கொழும்பு-13, இல.74 ஆ, கதிரேசன் வீதியில் வசித்துவந்த நடுவிலான் சரஸ்வதி என்ற இந்த யுவதி கடந்த 29 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். இவருடன் கடத்திச் செல்லப்பட்ட இன்னொரு யுவதியான சின்னத்தம்பி கௌரி என்பவர் கொச்சிக்கடை சிவன் கோயிலுக்கு அருகில் இறக்கிவிடப்பட்டுள்ளார். சம்பவ தினம் இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் வந்த ஆயுததாரிகளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும் அடையாள அட்டையை சோதனை செய்யவேண்டும் என்று இருவரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று பலவந்தமாக கண்களை கட்டி வெள்ளை வானில் கடத்திச் சென்றுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட வான் சாரதியான கருணேந்திரன் கருணாகரன் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல்போயிருப்பதாக தாயும் சகோதரியும் பிரதி அமைச்சரிடம் புகார் செய்துள்ளனர். கடத்தப்பட்ட கருணாகரன் 2001 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வான் சாரதியாக வேலை செய்து வருவதாகவும் சம்பவதினம் இரவு 8.30 மணியளவில் 2 சிவில் 2 இராணுவத்தினரும் விசாரணைக்கு என்று வெள்ளை வானில் ஏற்றிச் சென்றதாகவும் கடத்தப்பட்டவரின் தாய் பிரதி அமைச்சரிடமும் மட்டக்குளி பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். இவர்களது கடத்தல் தொடர்பாக ஐ.சி.ஆர்.சி., மனித உரிமைகள் ஆணைக்குழு, `காணாமற்போதல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகள் கண்காணிக்கும் குழு' ஆகிய அமைப்புகளுக்கும் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்விருவரின் கடத்தல் தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் தொடர்புகொண்டுள்ளார்.
Saturday, 3 May 2008
கைதடி யுவதி வெள்ளை வானில் வந்தோரால் கொழும்பில் கடத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment