Friday, 9 May 2008

(4ம் இணைப்பு)அம்பாறையில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி- 30 பேர் காயம்





அம்பாறை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை அகற்றும் பணி இடம்பெறுவதாக அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவரே முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதும் அத்தகவலை அரச தரப்பு தகவல்கள் மறுத்துள்ளன.

அமைச்சர் பேரியல் தற்போது கல்முனையில் பாதுகாப்புடன் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற சற்றுமுன்னரே அமைச்சர் பேரியல் அஸ்ரப் சம்பவ இடத்தை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்பாறையில் ஆளும்கட்சி எதிர்நோக்கும் தோல்வியில் இருந்து மீழ்வதற்காக இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட அரசியல் நாடகம் எனவும் சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: