நாளைய தினம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மோசடிகளை மேற்கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசி சேவைகளை துண்டிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முயற்சிப்பதாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் நாளைய தினத்தில் கையடக்கத் தொலைபேசி சேவைகளை இடைக்கிடை துண்டிக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே கையடக்கத் தொலைபேசி சேவைகளை துண்டிக்க முடியும் எனவும் தேர்தல் மோசடிகளை மூடி மறைக்க பாதுகாப்பு அமைச்சு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாளைய தினம் எந்தவொரு தொலைபேசி நிறுவனமாவது சேவையை துண்டித்தால் அதற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Friday, 9 May 2008
தேர்தல் மோசடிகளை மூடிமறைக்க கையடக்கத் தொலைபேசி சேவைகளை துண்டிக்க அரசாங்கம் முயற்சி - ஹக்கீம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment