Friday, 9 May 2008

பெய்ரூத்தின் மேற்குப் பகுதியை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் கைப்பற்றியுள்ளது

லெபனானின் தலைநகர் பெய்ரூத்தின் மேற்குப் பகுதியை ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

அமெரிக்க ஆதரவு அரசாங்க படைகளுக்கும், ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினருக்குமிடையில் கடந்த 3 தினங்களாக நடைபெற்ற கடும் மோதல்களையடுத்தே பெய்ரூத்தின் மேற்குப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அறிவித்துள்ளது.

இ;ந்த மோதல்களில் ஆகக் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுததாரிகள் பெய்ரூத் நகர வீதிகளில் கைக்குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூத் விமான நிலையத்தையும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

No comments: