Saturday, 24 May 2008

கரும்புலி உறுப்பினர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி சிம் விற்பனையாளருக்கு விளக்க மறியல்

கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்திய கரும்புலி உறுப்பினர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிக்கான சிம் அட்டையை விற்பனைசெய்ததாக கூறப்படும் முஸ்லீம் வர்த்தகரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நாமல் பண்டார பலல்லே நேற்று உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மொஹமட் ரிஸ்வி என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கொழும்பு மருதானை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்ததாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்கொலை தாக்குதல் நடத்திய கரும்புலி உறுப்பினருக்கு இரண்டு சிம் அட்டைகளை விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
source:குளோபல் தமிழ்செய்தி

No comments: