Saturday, 24 May 2008

தேசத்துரோக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்துள்ளஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை கலைக்கப்பட வேண்டும் - விமல் வீரவன்ச

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழு வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் மூலம் நியாயமானதும், சுயாதீனமானதுமான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் இந்த ஆணைக்குழு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புக்களுடன் இந்த ஆணைக்குழு கைகோர்த்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதலாகம ஆணைக்குழுவின் தலைவர் உதாலாகம வெளிநாட்டு நிறுவனங்களிடம் யாசகம் செய்வதாகவும், இதனால் குறித்த நாடுகளின் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களைவிட ஆணைக்குழுவின் தலைவர் உதாலகமே இந்த நிலைமைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதலாகம ஆணைக்குழு நாட்டிற்கு பிழையானதேர் முன்னுதாரணத்தை அளித்துள்ளதாகவும், உடனடியாக ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: