மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. அங்கு காவல்துறையினரின் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பகல் 12.15 மணியளவில் பிள்ளையான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் சாந்தன் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காத்தான்குடியில சுட்டுக்கொல்லப்பட்டனர்.
யார் இந்த சாந்தன் ஒரு சிறிய பார்வை?
விசேட அதிரடிப்படையில் இருந்து செயற்பட்ட அரச உளவுத்துறை அதிகாரியும், தற்போது கருணா குழுவிற்குள் இருந்து செயற்படும் ஆரயம்பதி பொறுப்பாளரும், முன்னைநாள் ராசிக் குழு பிரதி பிராந்திய பொறுப்பாளரும், புளொட் மோகன் குழுவின் முக்கியஸ்தராகவும் இருந்த சசி அல்லது சாந்தன் இண்று சுட்டுக்கொல்லபட்டார். சும்மார் 18 வருடமாக கிழக்கில் பல கொலைகளை சாதுரியமாக நடாத்தி வந்த இவருடைய மனைவி ஆரயம்பதி பகுதி பிரதேச சபை உறுப்பினராக தற்போது தெரிவு செய்யபட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் ஆரையம்பதியில் இருந்து காத்தான்குடிக்கு பயணிததுக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாந்தன் என்பவர் தமது காரியாலத்திலிருந்து வெளியேறிச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதில் சாந்தனின் மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளராகவும் சாந்தன் கடமையாற்றினார் எனக் கூறப்படுகிறது.
சாந்தனின் மனைவி ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவராக கடமையாற்றுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றும் இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பிள்ளையான் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தொலைத் தொடர்பு நிலையம் நடத்தி வந்த மன்சூர் என்பவரும் அவரது உதவியாளரும் என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிள்ளையான் தரப்பினரால் இந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் த.ம.வி. புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் உட்பட 5 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களையடுத்து, காத்தான்குடியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment